Wednesday, February 13, 2013

தமிழ் வளர்க்கணும்னா கொஞ்சம் கற்கணும்ல?




முகநூலில், திரு.ஆனந்தன் அமிர்தன் அவர்கள் தன் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து, பின்னர் நாம் அனைவரும் அறியும் பொருட்டு முகநூளில் பகிர்ந்த பதிவு.. நாமும் முயற்சிக்கலாமே!..

தமிழ் வளர்க்கணும்னா கொஞ்சம் கற்கணும்ல?

இலக்கணம் என்பது ஒழுங்கு, அமைப்பு என்று பொருள்படும். அசை பிரித்தல் பற்றிய ஒரு சிறு விளக்கம்.

தமிழில் ஒலி மாத்திரை (மாத்திரை என்றாலே அளவு) என்பது ½, 1, 2 என்ற அளவில் வரையறுக்கப்பட்டுள்ளது. நாம் உச்சரிக்கும் ஒலியின் அளவே மாத்திரைகள் என்று கொள்ளப்படுகிறது.

சொல்லிப் பாருங்களேன் “க்” (மெய்/ஒற்று) – ½ மாத்திரை, “க” (குறில்) – 1 மாத்திரை, “கா”(நெடில்) - 2 மாத்திரைகள்.

“அசை”கள் இரண்டு மட்டுமே : நேர் & நிரை :
நிரை – கட்டாயம் இரண்டு எழுத்துக்களாக மட்டுமே வரும். முதல் எழுத்து குறிலாகவும் இரண்டாவது எழுத்து குறில் (அ) நெடிலாக வரலாம்.


நேர் – பெரும்பாலும் நெடிலிலேயே(எ:கா நீ, நான், சேர், போர்) ஆரம்பிக்கும் என்றாலும், குறிலில் ஆரம்பித்து அடுத்து ஒற்று(மெய்)டன் வந்தாலும் நேர் எனப்படும். (எ:கா) நெல்,சொல்,மண், கண்).

சீர் : (வார்த்தை) இது,
ஓரசைச்சீர்(வா,செய்,மான்),
ஈரசைச்சீர்(திரு/மணம், மா/மன், நீ/ரலை) மூவசைச்சீர்(நீர்ப்/பற/வை, நற்/செய்/தி, வரு/மா/னம், வரு/வா/யென) என வகைப்படுத்தப் படுகிறது.

மேலேயிருக்கும் அசை மற்றும் சீர்ககளை வைத்தே,
நேர் + நேர் = தே/மா. (காய்ச்சீர் + காய்ச்சீர்)
நிரை + நேர் = புளி/மா. (கனிச்சீர் + காய்ச்சீர்)
நேர் + நிரை = கூ/விளம். ( காய்ச்சீர் + கனிச்சீர்)
நிரை + நிரை = கரு/விளம். (கனிச்சீர் +கனிச்சீர்) என வடிவமைக்கப் பட்டுள்ளது.

மூவசைச் சீரில் இறுதியில் நேர் வந்தால், “காய்” என்றும் நிரை வந்தால் “கனி” என்றும் பிரிக்கவேண்டும். ( தேமாங்காய்/ தேமாங்கனி, புளிமாங்காய்/கனி, கூவிளங்காய்/கனி, கருவிளங்காய்/கனி).

இது தவிர வெண்பாவில் (திருக்குறள் எல்லாமே வெண்பா தான்) கடைசி வார்த்தை எல்லாச் சீருமே,
“நாள்(நேர்), மலர்(நிரை), காசு(நேர்/நேர்), பிறப்பு(நிரை/நேர்)” என்ற வகையில் மட்டுமே அமையும்.

நன்றி: ஆனந்தன் அமிர்தன்

மற்றும் முகநூல்

Saturday, February 9, 2013

எங்கள் தோட்டத்தில் சுரேஷ் பிடித்த பாம்பு.

Tuesday, February 5, 2013

என் நண்பர் திரு. சுரேஷ்குமார் அவர்கள் பாம்பு பிடித்த பொழுது எடுத்த படம்.


என் நண்பர் திரு. சுரேஷ்குமார் அவர்கள், கேரளா சுற்றுலா சென்ற பொழுது, அங்கே ஒரு பாம்பு சென்றதை பார்த்து அதை அவர் பிடித்த பொழுது எடுத்த படம்.

SNAKE CATCHING BY SURESH, TIRUPUR








Sunday, February 3, 2013

எங்கள் தோட்டம்


எனது கணினியில் உள்ள தாய் அட்டையில் (Mother Boardக்கு தமிழில் வேறு வார்த்தை என்ன???)  ஏற்ப்பட்ட பழுதினால் ஒரு சிறு இடைவெளி ஏற்ப்பட்டு விட்டது. 



நண்பர்களே எங்கள் தோட்டம் பற்றி எங்கள் நண்பன் திரு.உதயகுமார்

எழுதியது.




http://tamiludhayan.blogspot.in/2013/01/blog-post_24.html