Tuesday, January 8, 2013

சினிமாக்காரர்களின் வேலை நிறுத்தம் - நியாயமா????



ஒரு சாதாரண வியாபாரம் செய்தாலும் சேவை வரி செலுத்துகிறான் சாமானியன்.  ஆனால் கோடிக் கணக்கில் வருமானம் இவர்கள் சேவை வரி கட்ட முடியாது என சொல்கிறார்கள். அவங்க நடித்த படத்தை பார்க்க சாமானியன் வரி கட்டுகிறான் ஆனால் இவங்க கட்ட மாட்டார்களாம். என்ன கொடுமை சார் இது. 

பாவம் இவங்களுக்கு யாருயா வரி போட்டது??? இந்த ஏழைங்க எப்படியா கட்டுவாங்க??









இதே நடிகர்கள் காவிரி நீருக்காக  உண்ணாவிரதம் இருந்தாங்களா??.   இவங்களுக்கு ஒரு பாதிப்பு எனும் போது மட்டும் ஒன்றாக இருப்பார்கள்.  இவர்கள் திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் மிக சிறந்த நடிகர்கள்.  நம் அரசியல்வாதிகள் அனைவரும் இவர்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.








அரசாங்கமே, இவர்களின் மேல் விதித்த சேவை வரியை  வாபஸ் வாங்காதே.

Monday, January 7, 2013

ஒரு தத்துவம்



சில மாதங்களுக்கு முன்பு நான் ஒரு புத்தகத்தில் படித்தது

     தினம் இரண்டு,
                  வாரம் இரண்டு,
                                 மாதம் இரண்டு,
                                                வருடம் இரண்டு.


இது நம் முன்னோர்கள் வகுத்தது.

இதன் பொருள் என்ன என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.




இதன் பொருள் நமக்கு, மிக உபயோகமானது.


இதனுடைய பதில் வரும் நாட்களில் !!!

Tuesday, January 1, 2013

நமது பாரம்பரிய உணவு - சிறு அறிமுகம்


        நேற்று இரவு உணவுக்கு நான் எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நமது ஊரான திருப்பூரில் நடைபெறும் " நளன் உணவகத்தின் " ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெறும் உணவுத் திருவிழாவிற்கு சென்று இருந்தோம்.   அங்கே இருந்த உணவு பட்டியலை பார்த்து மலைத்து விட்டேன்.  பல உணவுகளை நாம் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம்.   அந்த பட்டியலை பார்த்த போது ஒன்று தெரிந்தது, நமது முன்னோர்கள் எவ்வளவு சத்தான உணவுகளை சாப்பிட்டு  இருக்கின்றனர்.


நான் அங்கே பார்த்த சில உணவு வகைகள் வருமாறு


1.  புட்டு வகைகளில் - மக்கா சோளம்,  அரிசி, கம்பு, ராகி
2.  இட்லி வகைகளில் - காய் கறி, திணை, கொள்ளு, கம்பு
3. தோசை வகைகளில் - திணை, சாமை, தக்காளி, குதிரை வாலி
4. சப்பாத்தி வகைகளில் - சீரக சப்பாத்தி, சுக்கா சப்பாத்தி, மற்றும் சில
5. பாயசம் வகைகளில் - சாமை, அவல்
6. சித்ரன்னம் வகைளில் - நெல்லி, மல்லி, தக்காளி,

மேலும் சாம்பார் மற்றும்  10 வகை சட்னி மற்றும் பல உணவுகள்.


ஆனால் இன்றோ நாம் நமது பாரம்பரியமான சத்தான உணவுகளை விட்டு விட்டு வேறு நாட்டு உடம்புக்கு கேடு விளைவிக்கக் கூடிய துரித உணவுகளை அதிகமாக விரும்புகிறோம். 

அட, நாங்கள் என்ன சாப்பிட்டோம்  என சொல்ல வில்லையே, நாங்கள் சாப்பிட்டது, மேல் சொன்ன 4 வகை இட்லி, மக்கா சோள புட்டு, தக்காளி தோசை, சாமை தோசை, நெல்லி சாதம், இரண்டு வகை பாயசம்.  அனைத்தும் அருமை.  நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்.

HAPPY NEW YEAR TO ALL