Saturday, April 25, 2009

49-Oக்கு வாக்களிப்பது எப்படி ...................

1. வாக்குச் சாவடிக்கு சென்றதும் நம் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்று சரி பார்த்துவிட்டு, வாக்குச்சாவடி அதிகாரி நம்மிடம் ஒரு நோட்டில் கையெழுத்து வாங்குவார்.

2. பிறகு அடுத்த அதிகாரி நம் விரலில் மை வைப்பார்.

3. மை வைத்தவுடன், நாம் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்ப வில்லை; 49-O. பதிவு செய்ய விரும்புகிறேன் என்று சொல்ல வேண்டும்.

4. உடனே, முதலில் நாம் கையெழுத்திட்ட அதே நோட்டில் அந்த கையெழுத்தின் பக்கத்திலேயே 49-O என்று எழுதி இன்னொரு முறை நாம் கையெழுத்திட வேண்டும்.

இது தான் 49-O க்கு வாக்களிக்கும் முறை. நன்றி

Sunday, April 12, 2009

ஐயா, அம்மா தயவு செய்து ஒட்டு போடுங்க

அன்பார்ந்த வாக்களார்களே, நீங்கள் தயவு செய்து வரும் மே 16 தேதி வாக்கு சாவடிக்கு சென்று ஓட்டு போடுங்க. யாருக்கு வேணும்னாலும் ஓட்டு போடுங்க, ஆனா ஓட்டு போடுங்க. எந்த கட்சிக்கும் ஓட்டு போட மனம் இல்லையா, எதாவது சுயட்சைக்கு ஓட்டு போடுங்க. அதுக்கும் மனம் இல்லையா, 49-O க்கு ஓட்டு போடுங்க. ஏன் எனில் நீங்கள் ஓட்டு போட வில்லை என்றால் உங்கள் ஓட்டு வேறு யாராவது மூலம் போடப்பட்டு விடும். எனவே உங்கள் ஒட்டு கள்ள ஓட்டாக மாறாமல் இருக்க நீங்கள் அவசியம் வாக்களியுங்கள்.

இந்த 49-O பற்றி திரு.ஞாநி அவர்கள் "குமுதம்" புத்தகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக எழுதி உள்ளார்கள். இந்த 49-O பற்றி நான் மேலும் தகவல்கள் பெற வேண்டி உள்ளது. 49-O பற்றிய விதிமுறைகள் மற்றும் உபயோகப்படுத்தும் முறைகள் தகவல்களுடன் அடுத்து சந்திப்போம். நன்றி .

Saturday, April 11, 2009

NAANUM ORU BLOG ARAMBICHACHU

அப்பாடா, நானும் ஒரு blog ஆரம்பிச்சாச்சு. இதுக்கு பெயர் வைக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு, Iyara பார்க்காதது ஒன்று தான் குறை.

எல்லாரும் வைத்திருகின்றர்களே நம்முளும் ஒன்று வைச்சிகிட்டா தான் என்ன என்று ஒன்று ஆரம்பித்திக்கிறேன். என்ன எழுதுவது என்று இனி மேல் தான் முடிவு செய்யனும். ஏதாவது உருப்படியா எழுதனும் என்று யோசிக்கிறேன். பார்ப்போம். நன்றி